ஓர்பாலீர்ப்பு, ஒவ்வொரு முறையும் நான் இந்த வார்த்தையை பொது வெளியில் உச்சரிக்கும் போதும் சுற்றி உள்ள மக்கள் கூட்டம் விதம் விதமாக என் மீது பார்வைகளை வீசுவதை கண்டிருக்கிறேன். சிலர் நையாண்டி செய்வர், சில இளையவர்கள் ஷ் ஷ் என்று சத்தம் செய்வர் பின்னால் இருந்து. சில பெண்கள் வாயை மூடி இளிப்பர். சில பெரியவர்கள் தலையில் தட்டிக் கொண்டு 'கலி காலம்' என்று சலித்துக் கொள்வர். வேடம் போடும் சில நல்லவர்கள் யாரும் பார்க்காத நேரம் பார்த்து கண்ணால் பேசி கொஞ்சமாய் உதட்டை சுளிப்பர். ஆனால் எத்தனை பேர் இது ஒரு வார்த்தை என்று இல்லாமல் நம் போன்றோர் வாழ்க்கை என்று பார்க்கிறார்கள் இங்கு. ஈர்ப்பு என்பது அணுவில் இருந்து அண்டம் வரை எங்கும் பரவியுள்ள ஒன்று தான். அணு தங்களுக்குள் ஈர்க்க வேண்டும் என்றும், சூரியன் கோள்களை ஈர்க்க வேண்டும் என்றும் பூமி வளி மண்டலத்தை ஈர்க்க வேண்டும் என்றும் யார் இந்த இயற்க்கை விதிகளை படைத்தானோ அவனே மனிதர்களுக்கும் ஈர்ப்பு உணர்வுகளையும் அதில் பேதமைகளையும் தந்து இருக்க வேண்டும். மனிதனின் உடல் பற்றியும் அதன் பாகங்களின் பணிகளின் காரணம் பற்றியுமே அறிவியல் இன்னும் முழுமையாக அறியபடாத நிலையில் அவன் உணர்வுகளின் காரணத்தை மட்டும் எப்படி எளிதில் சரியென்றும் தவறென்றும் சொல்லிட முடியும்.
மனிதனின் அறிவுக்கு எட்டாத எதயும் அறிவியல் கையில் கொடுத்து விடுவதும் பல நேரங்களில், அதை இயற்க்கையின் நியதி என்று பரணில் ஏற்றி விடுவதுமே வழமையாய் இருக்கையில் சில பல அறிவு நிறைந்த மனிதர்கள், இத்தகைய மனித உணர்வுகளை கடவுள் பெயரால் தவறு என்று தம்பட்டம் அடிக்கின்றனர். அவர்கள் செய்வது வீண் தம்பட்டம் மட்டுமே. இருந்தாலும் சில நேரங்களில் நாம் நம் வாழ்வில் இத்தகைய இழி மனிதர்களின் கையில் மாட்டிக்கொள்வதுண்டு. வெளியில் வரவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் விழிப்பதுண்டு. அத்தகைய நிலைகளைப் பற்றி இங்கே நாம் பகிர்ந்து கொள்வோம். நான் அறிந்த மனிதர்களின் உண்மை கதைகளையும் அவர்கள் கடந்து வந்த பேச்சுகளையும் இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். எல்லோரும் ஒன்றாய் ஒரு நல்ல சமுதாயம் அமைப்போம் நமக்கே நமக்காய்.