Thursday, January 1, 2015


நம்மை நாமே மதிப்போம்

கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் ஒருத்தன் என் கிட்ட பேச்சுவாக்கில ஒரு விடயம் சொன்னான், ஆனா அது ரொம்பவே வருத்தப்படுற விடயமா தான் தெரிஞ்சது. “பாட்டம்னா தப்பா அண்ணா? எனக்கு பிடிக்குது அத நான் செய்றேன். வரானுங்க படுக்குறானுங்க ஆனா போகும் போது செருப்ப விட கேவலமா பார்த்துட்டு போறானுங்க. சில பேரு அசிங்கமா திட்டு வாங்க ‘அந்த நேரத்துல. கோவமா வரும். பாட்டம்னா கேவலமானா? என்று பொங்கினான் என்னிடம். இப்படி அவன் கேட்ட்து என்னிடம் மட்டும் இல்ல, நம்ம எல்லோர் கிட்டயும் தான்.
நம்மள்ள எவ்ளோ பேரு இந்த மாதிரி நினச்சி இருப்போம் பேசி இருப்போம் அப்டினு நம்ம மனசுக்கு நாமே கேள்வி கேட்டா நிறய பேரு ‘ஆமா தான் சொல்ல வேண்டி இருக்கும். நேரடியாகவோ இல்ல மறைமுகமாகவோ இத நிறய பேரு சொல்லி இருப்போம். அது ஒரு உணர்வு. ஓவ்வொருதனும் ஒவ்வொரு மாதிரி. ஒரு பையனுக்கு பொண்ண பிடிகிறது போல ஒரு பையனுக்கு ஒரு பையன பிடிக்கிறது போல இங்க ஒரு பையனுக்கு ஒரு பையன் கிட்ட ‘பாட்டமா நடக்க தோணுது, அது ஒரு வகை தான். அதுல தப்போ அசிங்கமோ அவமானமோ நாம எப்படி தீர்மானிக்க முடியும். இதுல உசத்தி மட்டம்னு எதுவும் இல்ல. சிலர் அவங்கள உடலுறவுக்கான ஒரு பொருள் போல தான் பல நேரம் பார்க்கிறாங்க.
அவன நாம தப்புனு சொன்னாலோ அல்லது கிண்டல் பண்ணாலோ நம்மள மத்தவங்க கிண்டல் பண்றத தப்பு சொல்றத நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். உன் பார்வைல அவன் அசிங்கம்னா சட்டத்தின் பார்வைல சமூகத்தின் பார்வைல நாம எல்லோரும் அசிங்கம் தான்.


காலம் காலமா பெரிய சாதிக்காரன் சின்ன சாதிக்காரன மதிக்காம போறதும், தன்ன விட பெரிய சாதிகாரன் கிட்ட இவன் பணிஞ்சு போறதும் நம்ம சமூகத்தில பார்த்து இருக்கோம். நான் சாதி பத்தி பேச வரல. சாதி தப்புனு நாம கொடி பிடிகிற மாதிரி தான் நானும் நமக்குள்ள இருக்கிற இந்த வேற்றுமை தப்புனு சொல்ல வரேன். நமக்குள்ளயே படிச்சவன், பணம் இருக்கிறவன், அழகு, வேலை இப்படி பல பேதங்கள் இருக்கத்தான் செய்யுது. இத எல்லாம் மறந்துட்டு அழிச்சிட்டு ஒரே குரலா ஒலிக்கும் போது தான் நமக்கும் உரிமை கிடைக்கும்; அது இல்லாம எவ்ளோ தான் கொடி பிடிச்சாலும் பெருசா சாதிக்க முடியாதுனு தான் நான் நினைகிறேன்.